விசுவாசி:அந்நிய பாஷையில் பேசுவது அவசியமா?
பாஸ்டர்: ஆம், விசுவாசிகள் கண்டிப்பாக அந்நிய பாஷையில் பேச வேண்டும்.
விசுவாசி:அப்படியா பாஸ்டர், வேதவசன ஆதாரங்கள் ஏதாவது இருக்கா?
பாஸ்டர் : நிச்சயமா, மாற்கு 16:17,18. தன்னை விசுவாசிக்கிறவர்கள் நவமான (புதிய) பாஷைகளை பேசுவார்கள்னு இருக்கே
விசுவாசி:அப்படினா 1 கொரிந்தியர் 14:22 அந்நிய பாஷை அவிசுவாசிகளுக்கான
அடையாளம்னு சொல்லுதே
பாஸ்டர் : நீங்க எல்லாத்தையுமே விதண்டாவாதமா பாக்குறீங்க, வசனத்தை வளைத்து உங்களுக்கேற்ற அர்த்தத்தை
கொடுக்குறீங்க, 1 கொரி 14ல இருக்கிறது மனிதர்களுக்கான மொழி, அதாவது சீன மொழி, இந்தி மொழி போன்றது, மாற்கு 16ல் இருப்பது தூதர்களின் மொழி
விசுவாசி:அப்படீன்னா எதுக்காக இந்த அந்நிய பாஷை ?
பாஸ்டர் : அது கடவுளோடு பேசும் பாஷை, தூதர்களின் பாஷை, அது சாத்தானுக்கு புரியாது
விசுவாசி:சாத்தான் யாரு பாஸ்டர்?
பாஸ்டர் : வானத்தில் இருந்து விழுந்த தூதன்
விசுவாசி:தூதனுக்கு தூதர் பாஷை புரியாதா?
பாஸ்டர் : 1 கொரிந்திய 14:2 தெளிவா சொல்லுது அது கடவுளோடு பேசும்
ரகசிய மொழி என்று
விசுவாசி:சரி அப்டியே இருக்கட்டும், 1 கொரிந்தியர் 14: 13, 14, அந்நிய பாஷையில் ஒருவர் பேசினால் அதன் அர்த்தத்தை சபையாருக்கு புரியும்படி எடுத்து
உரைக்க வேண்டும்னு சொல்லுதே, அப்படினா, சாத்தான் அதை ஒளிந்திருந்து கேட்டுவிட மாட்டானா?