ஆன்லைனில் தமிழ் டைப் செய்யுங்கள்

Monday, 16 April 2018

எவ்வுலக தண்டனை?

தசமபாகம் கொடுக்கலைனா என்ன ஆகும் பாஸ்டர்?
கடவுளுக்கு கோவம் வரும், வீட்ல இருக்கவங்களுக்கு ஒடம்புக்கு முடியாம போகும்
ஓ! அப்டினா ஒரு பொண்ண ரேப் பண்ணவனுக்கு உடனே தண்டனை கிடைக்குமா?
அது தெரியாது, ஆனா கடவுள் எல்லாத்தையும் பார்த்து கணக்கு எழுதி வெச்சிக்குவார், செத்ததுக்கு அப்புறம் எண்ணெய் சட்டியில போட்டு தாளிச்சிருவார்
அப்ப சரி, ஆமாம், அந்த பொண்ணு ஒரு முஸ்லீமாவோ இல்ல இந்துவாவோ இருந்தா அவ சொர்க்கத்துக்கு போக முடியுமா?
அது சொல்ல முடியாது
அப்ப சரி, அப்ப சரி, பணம் விஷயம்னா மட்டும் கடவுள் இந்த உலகத்துலயே தண்டனை கொடுத்து, பணத்த வசூல் பண்ணிடுவாரு, ஆனா மனிதாபிமானமில்லாத செயல் எல்லாம் Porn மூவி மாதிரி பார்த்துகிட்டு கணக்குப்புள்ள வேலைய செய்வாருங்க்றீங்க!